தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முத்திரை பதித்துள்ள நடிகை நந்திதா ஸ்வேதா, தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஓர் இடத்தை பெற்றுள்ளார்.

சமீபகாலமாக சினிமாவில் அதிகம் தெரியவில்லை எனக்கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திரைநிகழ்வுகளில் பிசியாகிவருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் திரும்பவும் ஆர்வம் உருவாகியுள்ளது. நந்திதா ஸ்வேதா தனது திரையுலக பயணத்தை 2008-ம் ஆண்டு "நந்தா லவ்ஸ் நந்திதா" என்ற கன்னடப் படத்தில் தொடங்கினார்.
இதையும் படிங்க: சிகப்பு நிற மாடன் உடையில் கலக்கும் பிரபல பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால்..!

அதன் பின்னர், தமிழ் சினிமாவில் ‘அட்டக்கத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘புலி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

இப்போது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கன்னட சினிமாவில் ‘Benny’ என்ற படத்தின் மூலம் பிஸியாகிறார்.

இந்த படம் சமுகக் கருத்துக்களைக் கொண்ட சீரியஸ் திரில்லராக உருவாகி வருகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நந்திதா.

இணையத்தில், நந்திதா ஸ்வேதா சமீபத்தில் வெளியிட்ட புதுப் போட்டோஷூட் படங்கள் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அதன் படி, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் பெரும் லைக்குகள் மற்றும் பாராட்டுகளுடன் மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் சில புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சில படங்களில் முக்கிய வேடங்களில், சிலவற்றில் கேரக்டர் ரோல்கள் எனத் தன்னை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார்.
இதையும் படிங்க: SK-வின் 'பராசக்தி'யில் வில்லன் இயக்குநர் லோகேஷ் கனகராஜா..! இதை எதிர்பாக்கலையே..!