கன்னட திரையுலகை தாண்டி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் தான் 'காந்தாரா'. 2022ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான கதைக்களத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது 'காந்தாரா 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு ஸ்பெஷல் வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
'காந்தாரா 2' திரைப்படத்தின் பின்னணியில், மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக உழைத்திருக்கும் ஒரு படைப்பு குழு, இன்று அந்த பயணத்தின் முக்கிய கட்டத்தை முடித்துள்ளனர். இப்படத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாரம்பரியங்களையும், மண்ணின் வாசனையையும், பக்தியையும், சமூக அரசியலையும் ஒன்றிணைக்கும் தனித்துவமான கதையமைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு நேரடி தொடர்ச்சி அல்ல, ஆனால் 'காந்தாரா' உலகத்துக்குள் மீண்டும் நம்மை அழைத்து செல்லும் ஒரு சக்திவாய்ந்த பாகம் ஆகும். இந்த படத்தில் முக்கியமான 'கனகவதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ருக்மிணி வசந்த தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி, படக்குழுவினர் அவருக்கு சிறப்பாக வாழ்த்து தெரிவித்து, புதிய ஒரு கரக்டர் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில், பாரம்பரிய ஆடையணிந்த நிலையில், சக்திமிக்க பார்வையுடன் காட்சியளிக்கும் அவரது தோற்றம், ரசிகர்களிடையே மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முன்னணி கதாநாயகனாக ரிஷப் ஷெட்டி மீண்டும் திரும்பியுள்ளார். இதில் அவர் முன் பாகத்தைவிட மேலும் ஆழமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பாகத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஜேஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறார். 'காந்தாரா' முதல் பாகத்தில் இசை ஒரு முக்கிய கதாநாயகனாகவே செயல்பட்டது.
இதையும் படிங்க: கவனத்தை இரத்த "சொட்ட சொட்ட நனையுது" படம்..! கோலாகலமான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..!
இதைத் தொடர்ந்து, இந்த பாகத்திலும் பாரம்பரியம், தெய்வீகம், மண் வாசனை, நாட்டு இசை ஆகியவை ஒன்றாக இசையிலும் மீண்டும் பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 'கேஜிஎஃப்', 'சாலார்', 'காந்தாரா' போன்ற வெற்றி படங்களை வழங்கிய ஹொம்பலே பிலிம்ஸ், இந்த 'காந்தாரா 2' படத்தையும் மிகப்பெரிய தயாரிப்பொன்றாக, பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. வன வாழ்வு, பழங்குடியினர் வாழ்க்கை, மகத்தான தெய்வ வழிபாட்டு மரபுகள், அந்தரங்க அரசியல் அனைத்தும் ஒன்றாக கலக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘காந்தாரா 2’ திரைப்படம், ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலக வட்டாரங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆகவே ‘காந்தாரா 2’ திரைப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ப்ரோமோஷன்கள் விரைவில் வெளியாகவுள்ளன. படத்தின் டீசர் வெளியாகும் தேதியை பற்றிய அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய 'கிங்டம்' படம்..! சென்னை ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு...!