தங்கத்தின் விலை குறைவு தற்காலிகமானதுதான் என்றும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதன் விலை உயர்ந்து கொண்டேதான் போகும் எனவும் தங்கம் மற்றும் வைரநகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இன்று தங்கம் விலை 22 கேரட் விலை 8 ஆயிரத்து 610, ஒரு சவரன் 68 ஆயிரத்து 880 ரூபாய். இதே ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ஆயிரத்து 150 ரூபாயாகவும், ஒரு சவரன் 57 ஆயிரமாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராமிற்கு 1,460 ரூபாயும், சவரனுக்கு 11 ஆயிரத்து 680 விலை கூடியுள்ளது.

இதற்கிடையில் தங்கம் விலை இறங்கியுள்ளதே என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் பார்த்தால், ஒரு கிராமிற்கு 100 ரூபாய் ஏறியிருக்கிறது என்றால், கிராமிற்கு 10 ரூபாய் தான் குறைந்துள்ளது எனக்கூறியுள்ளார் ஜெயந்திலால் சலானி. எனவே தான் நான்கரை மாதங்களில் ஒரு சவரன் தங்கம் விலை 11 ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்துள்ளது. இனி தங்கம் விலை எப்போதும் உயர்ந்து தான் இருக்கும். இப்போது உள்ள விலையை விட கொஞ்சம் குறையலாம்.
இதையும் படிங்க: நகை வாங்கணுமா.. உடனே கிளம்புங்க.. தலைகீழாக மாறிய தங்கம் விலை..!

இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் பட்சத்தில் தங்கம் விலை நிச்சயமாக உயர்ந்துதான் போகும். காரணம் என்னவென்றால், வளர்ந்தது வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் பெருமளவில் தங்களுடைய தங்கத்தினுடைய கையிருப்பை பெருமளவில் கூட்டி கொண்டு வருகின்றன. அதிகப்படுத்திக் கொண்டு வரும் காரணத்தினால் இன்னும் முதலீடுகள் தங்கத்தின் மீது பெருமனில் வர இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக தங்கம் சர்வதேச சாந்தையில் உயரும்.

அந்த உயர்வு நம் நாட்டிலும் எதிரொழுத்து நிச்சயமாக இந்தியாவின் தங்கம் விலை உயரும். இந்த விலை குறைப்பு குறைந்தது அப்படிங்கறதுல்லாம் தாற்காலமையானது ஒட்டுமொத்தமாக தங்கம் விலை பெரிய அளவில் உயர்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: உலகிலேயே மலிவான தங்கம் இந்த நாட்டில்தான் கிடைக்கிறது.. எந்த நாடு தெரியுமா.?