73 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் வேக பரவி வரும் சிக்கன்குனியா பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 உலகையே பயமுறுத்தியதைப் போலவே, தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் சிக்குன்குனியா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்டோர் இந்த கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பீதியடைந்த சீன அரசு, கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக நோயின் மையப்பகுதியான ஃபோஷான் நகரில், அதிகாரிகள் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தல் விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த அசாதாரண முடிவு சீனாவில் மீண்டும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசு சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடையும் வரை குறைந்தபட்ச ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளின் படுக்கையை கொசுவலையால் மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபோஷான் நகரில் காய்ச்சல், அரிப்பு மற்றும் மூட்டு வலிக்கு மருந்து வாங்குவோரின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: அவங்க சரியா தானே சொல்லிருக்காங்க.. கோபி சுதாகருக்கு வக்காலத்து வாங்கும் சீமான்..!!
கொசுக்களுக்கு எதிராக போராட வீரர்களையும் சீன அரசு களமிறக்கியுள்ளது. மாஸ்க் அணிந்த வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாஸ்க் அணிந்து கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் கொசு லார்வாக்களை உண்ணும் மீன்கள் ஃபோஷன் ஏரிகளில் விடப்பட்டுள்ளன. கூடுதலாக, கொசு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைக் கண்டறிந்து அழிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சில பகுதிகளில், யானை கொசுக்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை கொசுக்களை சீன அரசு ரிலீஸ் செய்து வருகிறது. இவை மனிதர்களைக் கடிக்காது. ஆனால் அவை நோயைப் பரப்பும் பிற கொசுக்களின் லார்வாக்களை உண்கின்றன. ஒரு லார்வா சாதாரண கொசுக்களின் சுமார் 100 முட்டைகளை உண்ணலாம். அதனால்தான் இந்த கொசுக்கள் உள்ளூர் கால்வாய்களிலும் விடப்படுகின்றன. இதன் விளைவாக, கொசுக்களின் பரவல் பெருமளவில் குறையும் என்று சீன அரசாங்கம் நம்புகிறது.
இதையும் படிங்க: அனைவருக்குமான கல்வி தான் மாநில கல்விக் கொள்கை.. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தெளிவான விளக்கம்..!