தங்கம் விறுவிறுன்னு விலை ஏறும்னு சொன்னாங்க. ஆனா சரசரனு சரியுதே என்று ஒரு சிலர் தற்போது இன்ப அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய நிலவரப்படி உயர்ந்துதானே இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருப்பினும் சராசரியாக பார்த்தால் தங்கம் விலை குறைய வாய்ப்புருப்பதாகவே கூறப்படுகிறது. உண்மைதான்.

அதற்கு அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றுதான் காரணம். அதனாலேயே உலகளவில் தங்கும் விலை சரிய தொடங்கி உள்ளது. அதாவது அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அந்நாட்டு மத்திய வங்கி போன்ற ஒரு அமைப்புடன் கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் அந்த அமைப்பான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு நெற்றி போட்டியில் அடிப்பது போல கடுமையான எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய எச்சரிக்கையில் அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மக்களே ரிலாக்ஸ்..! தங்கம் விலை இன்று குறைந்தது..!
இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் வர்த்தக போர் நாட்டின் மந்தமான பொருளாதார நிலை மற்றும் நிலையற்ற பணவீக்கம் ஆகியவற்றால் வரிவிகிதம் குறைக்கப்படாது என்று அந்நாட்டு பெடரல் வங்கி தரவித்துள்ளது.

பொதுவாக வட்டி விகிதம் குறைந்தால் டாலர் மதிப்பு சரியும். டாலர் மதிப்பு சரிந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என்பதால் தங்கம் விலை உயரும். ஆனால் இங்கே அப்படியே தலை கீழாக நடந்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படாமல் போனால் டாலர் மதிப்பு உயரும். டாலர் மதிப்பு உயர்ந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்ற காரணத்தால் தங்கம் விலை சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிமே தங்கம் எல்லாம் எட்டாக்கணி என்று விரக்தி அடைந்தவர்களுக்கு குட் நியூஸாகவே இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! 71 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை..!