ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் பசிபிக் கடற்கரையில் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்:
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே 133 கி.மீ தொலைவில், 74 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!
அலாஸ்கா மற்றும் ஹவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர். ஹவாய் மற்றும் ரஷ்யாவில் மூன்று மீட்டர் உயர அலைகள் வரை எழும்பும் என்று அமெரிக்க சுனாமி மையம் தெரிவித்துள்ளது.
"ஹவாய் மாநிலத்தில் உள்ள அனைத்து தீவுகளின் கடற்கரையோரங்களிலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சுனாமி உருவாகியுள்ளது" என்று அமெரிக்க தேசிய வானிலை சேவையின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது, மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை:
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் முதலில் ஒரு மீட்டர் வரை சுனாமிக்கான எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், தற்போது அதை மூன்று மீட்டராக உயர்த்தியுள்ளது. சுனாமிகள் மீண்டும் மீண்டும் தாக்கும் என்றும், எச்சரிக்கை நீக்கப்படும் வரை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம் என்றும் ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான், குவாம், ரோட்டா, டினியன், சைபன் உள்ளிட்ட தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகள் தீவிர சுனாமி கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் எங்கெல்லாம் எச்சரிக்கை விடுப்பு:
- ஓரிகான்: கலிபோர்னியா எல்லையிலிருந்து வாஷிங்டன் எல்லை வரையிலான கடற்கரை. கொலம்பியா நதியின் முகத்துவாரம் வரை
- வாஷிங்டன்: ஜுவான் டி ஃபுகா ஜலசந்தி, கொலம்பியா நதியின் முகத்துவாரம், வெளி கடற்கரையிலிருந்து ஸ்லிப் பாயிண்ட் வரை.
- பிரிட்டிஷ் கொலம்பியா: வடக்கு கடற்கரை, ஹைடா குவாய். வான்கூவர் தீவு. ஜுவான் டி ஃபூகா ஜலசந்தி.
- தென்கிழக்கு அலாஸ்கா: பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையிலிருந்து கேப் ஃபேர்வெதர் வரை.
- தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம்: கேப் ஃபேர்வெதர் முதல் சிக்னிக் விரிகுடா வரை.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி