மஹாராஷ்டிரா மாநில பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான ஆர்த்தி அருண் சாத்தே மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற ஆர்த்தி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 2023 முதல் 2024 வரை பாஜகவின் மஹாராஷ்டிரா செய்தித் தொடர்பாளராகவும், மும்பை பாஜக சட்டப் பிரிவு தலைவராகவும் இருந்தார். ஒரு ஆண்டுக்கு முன்பு அனைத்து பதவிகளையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 28ம் தேதி அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம், ஆர்த்தி உள்ளிட்ட மூவரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைத்தது. இந்நியமனம், நீதித்துறையின் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகளிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஆர்த்தியின் பாஜக பின்னணி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என விமர்சித்துள்ளன. இதற்கு பதிலளித்த பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே, ஆர்த்தி ஒரு ஆண்டுக்கு முன்பே பாஜகவை விட்டு விலகியதாகவும், அவருக்கும் கட்சிக்கும் இப்போது தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுர்ஜித் ARREST ஆனதுல வருத்தம்! எச்ச நாய்களா… பரிதாபங்கள் சேனலை கிழித்த ஏ.எம்.சவுத்ரி
எதிர்க்கட்சிகள் இந்நியமனத்தை "ஜனநாயகத்திற்கு பேரிடி" என விமர்சிக்க, சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆர்த்தியின் சட்டத்துறை அனுபவம் மற்றும் தகுதி இருந்தபோதிலும், அவரது அரசியல் பின்னணி நீதித்துறை நியமனங்களில் அரசியல் தலையீடு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தவரிடமிருந்து அரசுக்கு எதிரான வழக்குகளில் மக்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வரும் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சாத்வே இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "அரசியல் கட்சியின் பதவிகள் அனைத்திலிருந்தும் நான் விலகிவிட்டேன். எனவே, அந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஆகவே, வேறு எதுவும் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் பணம் சிக்கிய விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் நீதிபதி யஷ்வந்துக்கு சிக்கல்..