மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் இன்று (டிசம்பர் 10) அனல் தெறிக்க பேசினார். “எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையை திரையரங்கு மாதிரி மாத்திடுறாங்க. மோடி EVM ஹேக் பண்ணல... மக்கள் இதயத்தை ஹேக் பண்ணிட்டார்! சோனியா காந்தி குடியுரிமை வர்றதுக்கு முன்னாடி வாக்குச் திருட்டு செய்தார்” என்று எதிர்க்கட்சியை கடுமையாகத் தாக்கினார். இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்கள் விவாதத்தில் கங்கனா பேசினார். “இந்த ஆண்டு அவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் இடையூறுகள் ரொம்ப கவலையளிக்கிறது. அவங்க செயல்கள் அதிர்ச்சி தருது. எம்பிக்கள் ‘எஸ்.ஐ.ஆர்’ (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) பத்தி கூச்சலிடுறாங்க, மிரட்டுறாங்க. அவையின் விதிகளை மீறி நடந்துக்கிட்டாங்க. கடைசி 2-3 நாள் தவிர அவையை நடக்கவிடல” என்று குற்றம் சாட்டினார்.
“நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். புது எம்பிக்கள் இங்கே கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனா எதிர்க்கட்சி அவையை திரையரங்கு மாதிரி மாத்திடுது. காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் தோல்வியை ஏற்க மாட்டாங்க. பிரதமர் EVM ஹேக் பண்ணல... மக்கள் இதயத்தை ஹேக் பண்ணிட்டார்!” என்று மோடியை பாராட்டினார். வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க்கட்சி கோரிக்கையை “காலாவதியானது” என்று கிண்டல் செய்தார்.
இதையும் படிங்க: மணல் கொள்ளை பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்! சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
கங்கனா, “ஹரியானா தேர்தலில் மோசடி என்று ஒரு வெளிநாட்டு பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சி காட்டுது. அந்தப் பெண் சமூக ஊடகங்களில் ‘நான் இந்தியாவுக்கு வரல, தேர்தல்களுக்கு எனக்கு தொடர்பு இல்லை’னு பலமுறை சொல்லிட்டார்.

ஆனா அவங்க ஆதாரமில்லாம அவளோட புகைப்படத்தை அவையில் காட்டுறாங்க. அவையில் பதாகைகள் காட்ட தடை. ஒரு பெண்ணா, இன்னொரு பெண்ணோட கண்ணியத்தை நான் மதிக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு அவை சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினார்.
“பிரியங்கா காந்தி ‘கடந்த காலத்தை விட்டுடுங்க’னு சொல்றா. ஆனா காங்கிரஸ் தன்னோட கடந்த காலத்துல இருந்து தப்பிக்க முடியாது. சோனியா காந்தி இந்திய குடியுரிமை வர்றதுக்கு முன்னாடி இந்திய தேர்தலில் வாக்குச் சோரி செய்தார். பிரியங்கா கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவில் கொள்ளணும்” என்று காங்கிரஸை தாக்கினார்.
கங்கனா, “மத்திய அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி திட்டங்கள், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் போன்றவற்றால் பெண்களுக்கு நிறைய செய்துள்ளது. எதிர்க்கட்சி இதை அங்கீகரிக்காம, இடையூறு செய்கிறது” என்று முடித்தார்.
இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KanganaRanautSpeech, #ModiHacksHearts போன்ற ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆகின்றன. காங்கிரஸ் தரப்பு இதை “அவமானம்” என்று கண்டித்துள்ளது. தேர்தல் சீர்திருத்த விவாதம் இன்னும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டம் வேலைக்கு ஆகாது!! நிலத்தை விட்டுத்தர முடியாது! ஜெலன்ஸ்கி உறுதி!!