கே.ஏ.செங்கோட்டையனுக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து கும்பிட்ட அமைச்சர் விஜய்பாலாஜியால் பரபரப்பு
விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பெருந்துறைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வரும் 3ம் தேதி வருகை தந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை, அமைச்சர்கள் ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், விஜய் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் நேற்றிரவு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: “இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை... ஆனா...” - தவெக அமைச்சர் விஜய் பாலாஜி ஆவேசம்...
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 13 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 4 ஆயிரம் பயனாளிகளுக்கு 1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
கோவையில் இருந்து முதலமைச்சர் வந்து செல்லும் பயண திட்டமும், ரோடு ஷோ நிகழ்ச்சியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்க கட்சி நிர்வாகிகளுடன் நின்றிருந்த மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகன், முதலில் செல்ல முயன்ற போது, பின்னால் இருந்து வந்த அமைச்சர் விஜய் பாலாஜி, “சார், சார் பர்ஸ்ட் நான் தான், நீங்க முதல்ல போனீங்கனா அவ்ளோ தான்”, என கூற எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் அவருக்கு வழிவிட்டனர்.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு சால்வை அணிவித்த அமைச்சர் விஜய் பாலாஜி, செங்கோட்டையன் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்..
இதையும் படிங்க: தவெகவில் வெடிக்கிறதா அதிருப்திப் புயல்? கூண்டோடு வெளியேற ரெடியாகும் முக்கிய நிர்வாகிகள்? விஜய்க்கு புதிய சவால்!