காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது நினைவுகள் மற்றும் வாழ்வியல் பதிவுகள் அடங்கிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் நவம்பர் 10ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
ஆல்பிரட் ஏ. நாப்ஃப் சர்வதேச அளவில் வெளியிட, இந்தியாவில் ஹார்பர் காலின்ஸ் இந்தியா வெளியீடு செய்யவுள்ளது.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் சமூக ஊடகங்களில் இணைந்தார். அதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “கணவர் ராஜிவை பிரதமர் ஆக பதவியேற்க வேண்டும் என சொன்ன போது அதற்கு நான் எதிராக இருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

தனது சுயசரிதையை எழுதியதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். “எனது மீதான கண்ணோட்டத்தை சிலர் மாற்றிக் கொள்வர். சிலரின் கண்ணோட்டம் இன்னும் மோசமாகும். அது காரணமல்ல. ஆனால் நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதும்போது அல்லது பொது வாழ்க்கையில் இருக்கும்போது அதுதான் நடக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
புத்தகம் இத்தாலியில் அவரது குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜில் ராஜிவ் காந்தியை சந்தித்தது, இந்தியா வந்த பிறகான வாழ்க்கை, குடும்ப சோகங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது.
மற்றவர்கள் தனது கதையை பல ஆண்டுகளாகச் சொன்ன பிறகு இப்போது தானே சொல்லும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தகம் வெளியானால் சில அரசியல் விவாதங்கள் எழும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தந்தை குறித்து விமர்சனம்? பாட்னா கூட்டத்தில் வாய் விட்ட கார்கே? போலீசில் பாஜக புகார்!