இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு பிரட்டல் எடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நீதிமன்ற வளாகம் :
இமெயில் மூலம் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு?? 3 இடங்களில் பாம் வெடிக்கும்.. இமெயிலால் பரபரப்பான புதுக்கோட்டை..!!
முன்னாள் அமைச்சர் வீடு:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது இந்த நிலையில் வீடு மற்றும் பள்ளிக்கு இன்று(செப்,3) காலை 9 மணியளவில் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அந்த மெயிலில் அனுப்புநர் என்ற இடத்தில் எஸ்.வி. சேகர் என்று குறிப்பிடபட்டிருந்தது.இதை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர் இதில் வெடிகுண்டு, வெடிக்கும் பொருட்கள் இல்லாத நிலையில் வெறும் புரளி என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் வீட்டிற்கு சென்று 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதுபோல மெயில் மூலம் மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
தனியார் பள்ளி:
இலுப்பூர் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு பணிந்துள்ளதால் இதுவரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கவில்லை மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளே இருக்கின்றனர் வெளி ஆட்கள் யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை.
ஆட்சியர் அலுவலகம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியில் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மெயில் மூலமாக அனுப்பப்பட்ட மிரட்டல் , காரணமாக 3 மணி நேரத்திற்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபணர்ளுடன் இணைத்து தீவிர சோதனை நடத்தினர். அதன் பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இங்கயும் விட்டுவைக்கலயா..?? நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!