ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது என்றும் ஆனால் எட்டு ஆண்டுகள் என்பது தாமதமானது எனவும் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., யின் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான் என்றும் ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது., வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது., நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது., ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது என தெரிவித்தார்.

ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, எட்டு ஆண்டுகள் முழுவதும் செவிடாய் நடித்து வந்தது. இன்று மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குவதாக விமர்சித்தார். ஜிஎஸ்டி மக்களுக்கான நிவாரணம் அல்ல, அது பாஜக அரசின் கொள்ளைக் கருவி என்று ஏற்கனவே ராகுல் காந்தி கூறி இருப்பதாக சுட்டி காட்டினார். அந்த வார்த்தைகள் இன்று இடிமுழக்கம் போல் முழங்கி, பாஜக அரசின் பொய்முகமூடியைச் சிதறடிக்கின்றன என்றும் மக்களின் உழைப்பை கொள்ளையடித்து, இரத்தமும் வியர்வையும் பிழிந்து, தங்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்ட இந்த அரசு, இப்போது மக்களின் எழுச்சியால் குலுங்குகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அம்பலமாகும் வாக்கு திருட்டு! செப்.7ல் மாநில மாநாடு... அணி திரள செல்வப்பெருந்தகை அழைப்பு..!
இந்த நாட்டின் நிலம் எரிமலையைப் போலக் குலுங்குகிறது., மக்களின் கோபம் சுடும் காற்றல்ல அது புயல்., அந்த புயலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிறு சலுகைகளால் மக்களின் வேதனை அடங்காது என்றும் ஜிஎஸ்டி குறைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் வாழ்வைத் தொடும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளிலும், ஒவ்வொரு சேவையிலும் இந்த சுரண்டல் வரி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையெனில் மக்கள் குரல் போர்க் குரலாக வெடித்து, பாஜக ஆட்சியை வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே தள்ளித் தீர்க்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களோடது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா? மோடி வெள்ளை அறிக்கை விடட்டும்! விளாசிய செல்வப்பெருந்தகை..!