நாச்சியார் கோவில் அருகே மூன்று வயது பச்சிளம் குழந்தையை கொஞ்சுவது போல் கொஞ்சி உடல் முழுவதும் ரத்தம் காயம் ஏற்படும் அளவிற்கு கடித்து வைத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் வசிப்பவர் அன்பழகன். அவரது மனைவி அட்சயா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் அன்பழகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மனைவி அட்சயா, யோகராஜ் என்பவர் நடத்திவரும் சுய உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அட்சயா, யோகராஜ் ஆகிய இருவருக்கும் நாளடைவில் நட்பு ஏற்பட்டதால் அட்சயா வீட்டிற்கு யோகராஜ் அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் கொஞ்சி உடல் முழுவதும் இரத்த காயங்கள் ஏற்படும் அளவிற்கு கடித்து குதறியுள்ளார்.

இதில் குழந்தைக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த உறவினர்கள் அன்பழகன் மனைவி அட்சயாவிடம் விசாரித்துள்ளனர். காயம் குறித்து எதுவும் பதில் அளிக்காததால்
இதையும் படிங்க: போலீஸ் மக்களுக்கா.? ஆளுங்கட்சிக்கா.? கலையரசன் கைது.! கண்டித்த சீமான்.!!
சந்தேகம் அடைந்த உறவினர்கள் மூன்று வயது பெண் குழந்தையை திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காண்பித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு கடித்து வைத்த யோகராஜ் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்ததோடு, இதற்கு உதவியாக இருந்த தாய் அட்சயாவையும் போக்சோவின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு அவலத்தை மறைக்கவே கைது நாடகம்: அன்பில் மகேஷ் கைது குறித்து ஸ்டாலின் ஆவேசம்!