சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தப்பட்டதாகவும், அஜித்குமார் உடல் எதற்காக மதுரை கொண்டுவரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அஜித் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி தெரிவித்தார். அஜித் மரணமடைந்த செய்தியை அவரது தாயிடம் சிவகங்கை மாவட்ட எஸ்பி. தான் கூறியதாகவும், அஜித் குமார் தாக்கப்பட்ட போது சிவகங்கை மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது. அப்போது, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
இதையும் படிங்க: அஜித் கொலையை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்.. நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு.. அவிழும் முடிச்சுகள்!

சிறப்புப்படை எந்த அடிப்படையில் கையில் எடுத்தது என்றும் யார் சொல்லி இந்த வழக்கை கையில் எடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என முழுமையான விவரங்களை மறைக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உயர் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என காவலர்களின் உறவினர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்ட நிலையில், முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் என காவல்துறைக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். தாக்குவதற்கு காவல்துறைக்கு எதற்கு என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புலனாய்வு செய்ய தான் காவல்துறை என்றும் தெரிவித்தனர்.

புலனாய்வு எஸ்பி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இப்படியே அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். தொடர்ந்து, ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை என கூறிய நீதிபதிகள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஜித் உயிரிழப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். மேலும், இந்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!