வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார். அங்கு கள ஆய்விற்காக செல்ல முதலமைச்ச ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.
சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்ல உள்ள முதலமைச்சர்., வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதை அடுத்து, கோவையில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைக்க உள்ளார். மேலும் மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அவர் திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய திட்டங்கள் குறித்து விவாதம்!
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாய பெருமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

இது மட்டுமல்லாமல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ நடத்தவும் திட்டமிட்டுவதாக கூறப்படுகிறது.
ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதிகளிலேயே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் கள ஆய்வு செய்ய செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் உடல்நிலை தேறியதால் வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு கள ஆய்விற்காக செல்ல இருக்கிறார்.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் ஏமாளிகள் கிடையாது! திமுகவை பந்தாடிய எல்.முருகன்..!