கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கவிஞர் நந்தலாலாவின் இயற்பெயர் நெடுஞ்செழியன். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் என்னும் கிராமம். நந்தலாலாவின் மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு பாரதி, நிவேதிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து கொண்டே மக்கள் மேடைகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என பல தளங்களில் இயங்கி வந்த நந்தகாலவின் வசீகரப் பேச்சுக்கு தனி ரசிக ப்பட்டாளமே உண்டு.

பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர், ஆழ்ந்த வாசிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகத்தைப் பராமரித்து வந்தார் நந்தலாலா.
இதையும் படிங்க: வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றும் முயற்சியில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
மேலும், பெரியார், பாரதி விருதுகளைப் பெற்ற இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து இவர் 'ஓலை விசிறி' என்னும் நிகழ்ச்சியை வழங்கினார்.

'சோலைக்குயில்கள்' கவிதை இயக்கத்தையும் இதழையும் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் எழுதிய 'திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு' என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாக வெளிவந்தது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கவிஞர் நந்தலாலா உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார்

தமிழ் சமூகத்திற்கு அரும்தொண்டாற்ற இருந்த கவிஞர் நந்தலாலா மறைந்துவிட்டார் என்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புத்தக திருவிழாக்கள், பட்டிமன்றம், விவாதங்கள் என கவிஞர் நந்தலாலா குரல் ஒலிக்காத மேடையே இல்லை என கூறியுள்ளார்.கவிஞர் நந்தலாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற இடமா தமிழ்நாடு... ராமதாஸ் பரபரப்பு!!