நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்திய வரலாற்று அரசியல் நாடகமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார், அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன.
படத்தின் மிகப்பெரிய சிக்கல் தணிக்கை வாரியத்தில் (CBFC) ஏற்பட்டது. படம் ஜனவரி 10, 2026 அன்று பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் கடும் இழுபறி ஏற்பட்டது. சென்னை பிராந்திய தணிக்கை குழு படத்தை ஆய்வு செய்தபோது, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்களில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரி கோரியது. இந்த காட்சிகள் படத்தின் மையக் கதைக்கு மிக முக்கியமானவை என்பதால், அவற்றை நீக்கினால் கதை முற்றிலும் மாறிவிடும் என்று இயக்குநர் சுதா கொங்கரா கருதினார்.

இதனால், படக்குழு மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்தின் ரிவைசிங் கமிட்டிக்கு முறையிட்டது. இந்த சிக்கல் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கும் தணிக்கை பிரச்சனை ஏற்பட்ட அதே நேரத்தில் நடந்ததால், தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 8, 2026 வரை சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி, படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே பரவியது.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று… சென்சார் போர்ட் மேல்முறையீடு… தொடரும் சர்ச்சை..!
ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்று விவகாரம் சிக்கலில் இருக்கும் நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்று வழங்கி தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தணிக்கை சான்று கிடைத்த நிலையில் பராசக்தி படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சிக்கலில் ஜனநாயகன்… இழுத்தடிக்கும் சென்சார்… ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு…!