சமீபகாலமாக, தமிழ்நாட்டில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தெரு நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வெறிநாய் கடியால் ஏற்படும் 'ரேபிஸ்' நோய் தாக்கி, பலர் உயிரிழக்கும் சோகங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூரில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்துக்குதறிய பயங்கரம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியைச் சார்ந்த அருள் மகன் மோசிக்கிரன்(3) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளியே மோசிக்கிரன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென வந்த தெரு நாய் சிறுவனை கடித்து குதறி உள்ளது.
மேலும் 3 வயது குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்... ஒரே நாளில் 4 குழந்தைகள் படுகாயம்...!
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் நெருநாய்கள்... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி...!