பட வாய்ப்புக்காக கவர்ச்சி கோதாவில் இறங்கி உள்ளார் நடிகை வாணி போஜன்.

விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய வாணி போஜனுக்கு, மாடலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது .

மாடலிங் துறையில் பணியாற்றிய போது தான் 'ஓர் இரவு' பட வாய்ப்பு 2010-ல் இவருக்கு கிடைத்தது. ஹீரோயினாக களமிறங்கிய வாணி இந்த படம் மூலம் தோல்வியை சந்தித்தார்.

இதையும் படிங்க: போர்ச்சுகலில் அதிகாலையில் பரபரப்பு… அஜித்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
பின்னர் 2012- அமோலி என்கிற படத்திலும் நடித்தார். இந்த படமும் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ஆஹா மற்றும் மாயா சீரியலில் நடித்தார்.

இந்த சீரியல் இவருக்கு பெரிதாக பெயர் வாங்கி கொடுக்காத நிலையில், 2013 முதல் 2018 முதல் 5 வருடங்கள் ஓடிய தெய்வமகள் சீரியல் வாணியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

இதன் பின்னர் சின்னத்திரையில் இருந்து இவரை வெள்ளி திரையில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

அந்த வகையில், வாணி போஜன் இரண்டாவது நாயகியாக நடித்த ஓ மை கடவுளே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும், நிலையான ஹீரோயின் என்கிற இடத்தை இவரால் பிடிக்கமுடியாத நிலையில், தற்போது போராடி வருகிறார்.

தற்போது இவரின் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, மற்றும், ஆர்யன் ஆகி படங்கள் உள்ளன.

இந்நிலையில் வாணி போஜன், படுக்கையறை புகைப்படங்கள் சிலவற்றை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டியை கடுப்பாக்கிய சிவபாலன்; நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!