சென்னையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைற்றார்கள். காரை ஏற்றி கொலை செய்தது அரசியல் பிரபலத்தின் வாரிசு என்பதால் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாக உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில், தற்பொழுது திருமங்கலம் காவல் துறையினர் அந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சென்னை ஐயனாவரம் முத்தமன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் நித்தின் சாய், இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர் அபிஷேக் என்பவர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நித்தின் சாய் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் தன் நண்பர்களுடன் திருமங்கலம் பள்ளி சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு சொகுசுக்கார் ஒன்று படுபயங்கரமாக மோதியதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டார். பின்னால் அமர்ந்து வந்தன் நித்தின் சாய் கீழே நிலைத்தவறி விழுந்த போது, அவர் மீது இரண்டு முறை காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியது போல கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி
இந்நிலையில் அது விபத்து அல்ல. திட்டமிட்ட படுகொலை என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தில் இந்த திமுக அரசியல் பிரமுகரின் மகள்வழி பேரன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என கூறி உயிரிழந்த நித்தின் சாயின் உறவினர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அந்த முற்றுகை போராட்ட போராட்டமானது நேற்று நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை அண்ணாநகர் திருமங்கலம் காவல் துறையினர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திமுகா பிரமுகர் தனசேகர் அதாவது கேகே நகர் தனசேகர் அவர்களின் மகள்வழி பேரன் சந்துரு என்பவரை இன்று அதிகாலையில் அவரது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து கைது செய்ததாக தெரிய வருகிறது.
தற்போது அவரை காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணையானது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எதற்காக இந்த சம்பவமானது நடைபெற்றது? ஏன் அவ்வாறு காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார் என்பதெல்லாம் அடுத்தடுத்து சந்துருவாக்கும் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே தற்போது தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!