கடப்பாக்கம் மகளிர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவிகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போடப்பட்டதில், இரண்டு மாணவிக்கு மூச்சுத் திணறல் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடப்பாக்கம் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு மூளை காய்ச்சலுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது அதில் இரண்டு ஆறாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ க்கும் பத்தாம் வகுப்பு மாணவி கவிய ஸ்ரீ ஆகிய இருவருக்கும் ( wheezing problem ) மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தலைமையாசிரியர் உடனடியாக இரு மாணவியர்களை அங்குள்ள மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக இரு மாணவிகளை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்பர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்குமார் 250க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதில் இருவருக்கு மட்டும் இதுபோல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதையும் படிங்க: போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா? கோர்ட்டில் குட்டு வாங்கும் திமுக.. விமர்சித்த அதிமுக..!
இதையும் படிங்க: Christians, muslims பார்த்தா பாஜகவுக்கு அவ்ளோ பயமா? பந்தாடிய சீமான்...